அமெரிக்காவில் தன்னை விட்டுப் பிரிந்து சென்ற காதலியை, காதலன் சுட்டுக் கொன்ற வீடியோ வெளியாகி உள்ளது.
மேலும் லாஸ் ஏஞ்சலிஸ் அருகே உள்ள பாகோய்மா என்ற இடத்தைச் சேர்ந்த ரூயிஸ் என்ற பெண் நேற்று தனது வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது அவரது முன்னாள் காதலனைக் கண்டதும், அவர் வீட்டுக்குள் சென்று ஒளிந்து கொள்ள முயன்றார். ஆனால் விரட்டி வந்த ரூயிசின் காதலன் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் அவரைச் சரமாரியாகச் சுட்டான்.
அத்தோடு தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் முன் சுடப்பட்ட ரூயிஸ் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.