மாத்தறை பகுதியில் 18 வயதுக்குட்பட்ட பெண்களை பயன்படுத்தி விபச்சார விடுதி ஒன்றினை நடாத்தி வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் மாத்தறை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதாகவும், இதன்போது, குறித்த பெண்ணை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.