January 17, 2021
ஜனநாயக விடுதலைப் போராளி

இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளது – அதிர்ச்சி தகவல்

கடந்த ஆண்டில் (2019) இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளது என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் 439 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இன்று (1) உலக எய்ட்ஸ் தினமாகும். இதை முன்னிட்டு, நேற்று ஊடக சந்திப்பில் உரையாற்றிய சுகாதார மேம்பாட்டு பணியக இயக்குநர் வைத்தியர் பாலித கருணாபேம இதனை தெரிவித்தார்.

எச்.ஐ.வி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 15-24 வயதுடைய இளையவர்களிடையே அதிகரித்துள்ளது. அவர்களில் 359 பேர் ஆண்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

2019 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்ட புதிய எச்.ஐ.வி நோயாளர்களில் 12 சதவீதமானவர்கள் 15- 24 வயதுடையவர்களாவர். அவர்களில் 89 சதவீதம் பேர் ஆண்களே.

இலங்கையில் 1987ஆம் ஆண்டு முதல் இதுவரை 3,500 இற்கும் அதிகமான எச்.ஐ.வி நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த போதிலும், உலகளவில் ஒப்பிடும்போது தொற்று சதவீதம் மிக குறைவானது (0.1 சதவீதத்திற்கும் குறைவானது).

ஆனால், அண்மைய காலங்களில் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் படிப்படியாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. குறைந்த பரவலை பராமரிப்பது எங்கள் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்று வைத்தியர் பாலித கருணாபேம கூறினார்.

பாதுகாப்பற்ற உடலுறவு மூலமாகவும், பெரும்பாலும் ஆண்களில் பாதுகாப்பற்ற ஒரே பாலின உறவுகளாலும் நாட்டில் எச்.ஐ.வி அதிகளவில் பரவுவதாக கூறினார்.

இந்த ஆண்டு எயிட்ஸ் தினத்தில் “எச்.ஐ.வி.யைத் தடுக்கும் இளைஞர் பொறுப்பு” என்ற கருப்பொருiள இலங்கை ஏற்றுக்கொண்டுள்ளது.

சிறு வயதிலேயே பாலியல் நடவடிக்கைகளை ஆரம்பித்தல், துவக்கம், பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றுகள் பற்றிய போதிய அறிவின்மை, ஆபத்தான நடத்தைகளைத் தவிர்ப்பதற்கு தேவையான வாழ்க்கைத் திறன் இல்லாதது, நவீன தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல், அறியப்படாத கூட்டாளர்களுடன் உடனடி உறவுகளை உருவாக்குதல், ஒரே நேரத்தில் பல கூட்டாளர்களைக் கொண்டிருத்தல் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டுடனான பாலியல் உறவுகள் காரணமாக எச்.ஐ.வி தொற்று ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

எச்.ஐ.வி தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய தடுப்பு நடவடிக்கைகளாக – நேர்மறையான நடத்தை மாற்றத்திற்கான விரிவான பாலியல் சுகாதார கல்வி மற்றும் வாழ்க்கைத் திறன் மேம்பாடு, திருமணம் வரை உடலுறவை தாமதப்படுத்துதல், ஒரு உண்மையுள்ள கூட்டாளருக்டன் உடலுறவை வைத்திருத்தல், ஒவ்வொரு கூட்டாளரிடமும் சரியாகவும் தொடர்ச்சியாகவும் ஆணுறை பயன்படுத்துதல், தொற்று அபாயத்தில் உள்ளவர்களுக்கு எச்.ஐ.வி பரிசோதனை மற்றும் சிகிச்சை சேவைகளைக் குறிப்பிடுவது, களங்கம் மற்றும் பாகுபாட்டைக் குறைத்தல் மற்றும் சிகிச்சை, கவனிப்பு மற்றும் ஆதரவிற்கான ஒரு சூழலை உருவாக்குதல் ஆகியவற்ற குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

Leave a Comment