இந்தியாவில் காதலனுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்காக கணவரை மனைவி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா தொட்டஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப். 32 வயதான இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
இவருக்கு திருமணம் ஆகி ரோகினி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்நிலையில் பிரதீப் திடீரென்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனால் இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த பொலிசார், பிரதீப்பின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின் இது குறித்து வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், அவரின் மனைவி மீது பொலிசாருக்கு சந்தேகம் வலுத்ததால், பொலிசார் கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டனர்.
அப்போது அவர், கணவனை காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். பொலிசார் விசாரணையில்,
குடிக்கு அடிமையான பிரதீப் அடிக்கடி மது போதையில் வந்து ரோகிணியுடன் தகராறு செய்து அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக வீட்டிற்கு சமாதானம் செய்வது போல், பிரதீப்பின் நண்பர் சீனிவாசன் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.
இதனால், ரோகிணிக்கும் சீனிவாசனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளைடைவில் மிகவும் நெருங்கி பழகும் அளவிற்கு மாறியுள்ளது.
இவர்களின் இந்த காதல் விஷயம், காலபோக்கில் கணவர் பிரதீப்புக்கு தெரியவர இருவரையும் கண்டித்துள்ளார். கணவர் பிரதீப்பை உயிருடன் விட்டால் நாம் சந்தோஷமாக இருக்க முடியாது.
ஆகையால், குடிபோதையில் இருந்த கணவர் பிரதீப்பை இருவரும் சேர்ந்து கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். குழந்தைகள் அப்பா எங்கே கேட்டபோது தூங்குவதாக கூறி குழந்தைகளையும் தூங்கவைத்துள்ளார்.
அதன் பின்னர் தனது கணவர் குடிபோதையில் இறந்துவிட்டதாக கூறி ரோகிணி நாடகமாடியுள்ளார் என்பது தெரியவர, இருவரையும் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.