January 17, 2021
ஜனநாயக விடுதலைப் போராளி

ஆபாச அழகியை அடித்தே கொன்ற கணவர் – வெளிவரும் அதிர்ச்சி

அமெரிக்காவில் ஆபாச அழகியொருவரை அடித்தே கொன்ற கணவர், அதற்கு விசித்திர விளக்கமளித்துள்ளார். நீதிமன்றத்தில் வாக்குமூலமளித்த கணவன், “மனைவியின் பாலியல் ஆசைக்கு தன்னால் ஈடுகொடுக்க முடியாததால் கொலை செய்தேன்“ என தெரிவித்துள்ளார்.

“கிட்டி கேட் வெஸ்ட்” என்ற பெயரில் இணையத்தளத்தில் தனது ஆபாச படங்களை விற்பனை செய்யும் கத்லீன் வெஸ்டின் (42) படுகொலைக்கு அவரது கணவரான வில்லியம் ஜெஃப்ரி வெஸ்ட் (47) தான் காரணமென்பதை அலபாமா நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜெஃப் வெஸ்ட் இரண்டு முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கத்லீன் ‘கேட்’ வெஸ்டின் அரை நிர்வாண உடல் 2018 ஜனவரியில் காலேராவில் உள்ள தம்பதியரின் புறநகர் வீட்டிற்கு முன்னால் தெருவில் கண்டெடுக்கப்பட்டது.

வெஸ்ட் தனது மனைவியை ஒரு மது போத்தலல் தலையில் அடித்து கொன்றதாக சட்டத்தரணிகள் கூறியிருந்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மது போத்தலில் வெஸ்டின் கைரேகை கண்டறியப்பட்டது.

பிரேத பரிசோதனையில் கத்லீனின் உடலில் சட்டவரம்பை விட 3 மடங்கு அதிக அல்ஹகோல் கண்டறிப்பட்டது. அவர் நிறை போதையில் விழுந்து இறந்து விட்டதாக கணவர் தரப்பில் வாதிடப்பட்ட போதும், பின்னர் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

வீட்டில் குடும்ப பெண்ணாகவும், அதேநேரம் இணையத்தளத்தில் தனது ஆபாசப்படங்களை காட்சிப்படுத்தி பணம் சம்பாதிப்பவராகவும் கத்லீன் செயற்பட்டார்.

மர்லின் மன்றோவை போன்ற தோற்றத்தையுடைய கத்லீனின் ஆபாசப்படங்களை பார்க்க பலர் பணம் செலுத்தியுள்ளனர்.

“கிட்டி கேட் வெஸ்ட்” என்ற பெயரில் வெளியிடப்பட்ட அவரது வயதுவந்த படங்கள் – தம்பதியினரிடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தவில்லை என்றும், ஜெஃப் வெஸ்ட் மனைவிக்கு உதவினார் என்றும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்குமிடையில் அடிக்கடி வாய்த்தர்க்கம் ஏற்பட்டதற்கு ஆதாரமாக குரல் அஞ்சல்களையும், குறுஞ்செய்திகளையும் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டது.

கத்லீன் இறந்து கிடப்பதற்கு எட்டு நாட்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட உரை செய்திகளை ஷெல்பி கவுண்டி நீதிபதிகள் மதிப்பாய்வு செய்தனர்.

அவர் எழுதியிருந்தார்: “நீங்கள் என்னுடன் இருக்க விரும்பவில்லை என்று என்னிடம் சொல்ல நீங்கள் பயப்படுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் அது பொய் சொல்வதன் மூலம் என்னை மேலும் காயப்படுத்துகிறது” என.

தனது நிர்வாண புகைப்படங்களையும் கணவனுக்கு அனுப்பியுள்ளார். “என்னை கவர்ச்சியாக உணர்ந்ததற்கு நன்றி“ என மற்றொரு செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்கள் 14 வருடங்கள் திருமண வாழ்க்கை வாழ்ந்தனர்.

ஆனால், அவரது மனைவி வாரத்தில் நான்கு அல்லது ஐந்து முறை உடலுறவு கொள்ள ஆர்வமாக இருந்ததால் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஏனெனில், கணவன் எப்போதும் உடலுறவு கொள்ள விரும்பவில்லை.

“அவளைப் போல பாலியல் ஆர்வம் எனக்கில்லை. உள்ளது உள்ளபடி தான். நான் என்னுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர் அதில் மகிழ்ச்சியடையவில்லை” என்று வெஸ்ட், போலீசாரிடம் கூறினார்.

வெஸ்ட் தனது மனைவி இருபாலினியாக இருப்பதாகவும், மற்ற பெண்களுடன் உறவு கொள்வது குறித்து பேசியதாகவும் கூறினார்.

அவர் கூறினார்: “அவர் பெண்களை விரும்பினார். அவர் சமீபத்தில் வாழ்க்கை முறையைப் பார்க்க விரும்பினார். ”

இருப்பினும், குறுஞ்செய்திகளின் குறுக்கு விசாரணையின் போது, ​​தம்பதியினரிடையே நெருக்கம் மற்றும் அன்பை வெளிப்படுத்தும் டஜன் கணக்கான குறுஞ்செய்திகளையும் நீதிமன்றம் காட்டியது.

வெஸ்ட் தனது மனைவி இளஞ்சிவப்பு நிற ப்ரா, இளஞ்சிவப்பு பல வண்ண உள்ளாடை மற்றும் இளஞ்சிவப்பு ஸ்டைலெட்டோ ஹீல்ஸ் அணிந்த புகைப்படங்களை எடுத்த பின்னர், ஜனவரி 12, 2018 அன்று கொலை செய்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட கத்லீனின் தாயார், தனது மருமகனை ஆதரித்து சாட்சியமளித்துள்ளார். தனது மகள் அளவிற்கதிகமான குடிப்பழக்கமுடையவர் என தெரிவித்தார். ஒரு பக்தியுள்ள, அன்பான கணவர் மற்றும் டீனேஜ் மகளுக்கு ஒரு நல்ல தந்தையாக விளங்கினார் என்றும் விவரித்தார்.

 

அவர் மீதான கொலைக்குற்றச்சாட்டு உறுதியானதையடுத்து, 2021 ஜனவரியில் தீர்ப்பு வழங்கப்படும்.

Related posts

Leave a Comment