December 2, 2020
ஜனநாயக விடுதலைப் போராளி

3 நாட்களில் ஏழு கண்டங்களிலும் 208 நாடுகளுக்கு சென்று வந்த இளம்பெண்!

3 நாட்களில் ஏழு கண்டங்களிலும் 208 நாடுகளுக்கு சென்று சுற்றி வந்து உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார் இளம்பெண் ஒருவர்.

ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த காவ்லா அல்ரொமைதி என்ற பெண்ணே குறித்த சாதனையை படைத்துள்ளார்,

இவர் 3 நாட்கள் 14 மணி நேரங்கள் 46 நிமிடங்கள் 48 விநாடிகளில் ஏழு கண்டங்களில் பயணம் மேற்கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 87 மணிநேரம் பயணம் செய்துள்ளார்.

இவரது பயணம் கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி, ஆஸ்திரேலியாவில் நிறைவடைந்துள்ளது. இந்த பயணத்தின் போது அவர் 208 நாடுகளுக்கு சென்று வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இவரது சாதனை அங்கீகரிக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளதுடன். இது மிகவும் கடினமாக பயணமாக இருந்ததாகவும், ஆனால் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொறுமை, வேகம், சாதிக்க வேண்டுமென்ற முயற்சியிருந்தால் எதுவும் இந்த உலகில் சாத்தியம் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் இந்த இளம்பெண்.

Related posts

Leave a Comment