December 2, 2020
ஜனநாயக விடுதலைப் போராளி

செல்போன் பேசிக்கொண்டிருந்த மாணவர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்!

கனடாவின் ரொரண்டோ நகரில் செல்போன் பேசிக்கொண்டிருந்த இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த பன்யம் அகில் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த மாணவர் அங்கு தங்கியிருந்து ஹோட்டல் முகாமைத்துவம் படித்துவந்த நிலையில் கடந்த எட்டாம் திகதி தான் தங்கியிருக்கும் இருப்பிட பல்கனியிலிருந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அதன்போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவர் பரிதாபகரமாக பலியாகினார்.

இந்த நிலையில் உயிரிழந்த மாணவனின் சடலத்தை இந்தியாவுக்கு கொண்டுவரும் ஏற்பாடுகளும் நடந்துவருகின்றன.

Related posts

Leave a Comment