October 22, 2020
ஜனநாயக விடுதலைப் போராளி

மனைவியை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்தவர்? – கொரோனா காலத்தில் சம்பவம்

பன்னல – கெகில்லபிடிய பிரசேத்தில் நபர் ஒருவர் அவரது மனைவியை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் (12) திகதி இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த பெண் 39 வயதுடைய அதே பகுதியில் வசித்து வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கொலை செய்த நபர் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

Leave a Comment