October 22, 2020
ஜனநாயக விடுதலைப் போராளி

ஒன்லைனில் சந்தித்த காதலனை நேரில் சந்திப்பதற்காக பறந்து சென்ற பெண்!

ஒன்லைனில் சந்தித்த காதலனை நேரில் சந்திப்பதற்காக 1,500 மைல் தூரம் ஒரு அமெரிக்கப்பெண் பறந்து சென்றார்.

இளம் தொழிலதிபரான ஜாஸ்மின் ட்ரிக்ஸ் (23), இவர் ஏழு நாட்களுக்கு முன்னர் தான் ஒன்லைனில் சந்தித்த காதலனை காண்பதற்காக இண்டியானாவிலிருந்து டெக்சாசுக்கு விமானத்தில் புறப்பட்டார்.

ஆனால், அவர் விமானம் ஏறிய உடன் அந்த நபருக்கு ஜாஸ்மின் குறுஞ்செய்திகள் அனுப்ப, அவரிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை.

தன்னுடையை மொபைல் எண்ணை அவர் பிளாக் செய்துவிட்டாரோ என குழப்பமடைந்த ஜாஸ்மின் டெக்சாஸ் வந்து இறங்கியதும் அந்த நபரை மொபைலில் அழைத்துள்ளார்.

ஆனால், அவர் ஜாஸ்மினுடைய எண்ணை பிளாக் செய்துவிட்டது உறுதியாக, ஜாஸ்மின் செய்வதறியாது திகைத்துவிட்டார்.

நல்லவேளையாக அருகில் தனது தோழி ஒருவர் இருப்பது நினைவுக்கு வர, அவரது வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்த ஜாஸ்மின் அதன் பின்னர் வீடு திரும்பியிருக்கிறார் .

இந்நிலையில் தன்னை வரச் சொல்லிவிட்டு அந்த நபர் ஏன் இப்படிச் செய்தார் என்ற குழப்பம் நீ ங்கவேயில்லை அவருக்கு.

பணச் செலவுடன் ஜாஸ்மின் இதயமும் நோக, ஏமாற்றத்தால் நொந்துபோயிருக்கிறார் அவர், இதுபோல் தாங்கள் நேரில் சந்தித்திராத நபர்களை சந்திக்கும்போது ஏற்படும் அபாயம் குறித்து மற்றவர்களை எச்சரித்து வருகிறார்.

Related posts

Leave a Comment